எனதன்பு மகளுக்கு .........
பிறந்தேனே என நான்
மகிழ்ந்ததுண்டு
என் பெறோரின்
அன்பை
ருசித்தபோது
பிறந்தேனே பெண்ணாக
என மகிழ்ந்ததுண்டு
கணவருக்கு வாரிசு
கொடுக்க முடிந்த போது
காதல் கொண்டவனை
கரம் பற்ற இயலாதென
அறிந்த போதும்
மனம் மகிழ்ந்தேன்
சூட்டிய மாலையிலே
பெற்றோரின்
விருப்பம் அது
என அறிந்த போது
விருப்பமில்லா கட்டிலிலே
விபசாரிபோல்
உறவு கொண்டேன்
உற்றாரும் பெற்றோரும்
மகிழ்ந்திடவே
இன்பம் கொண்டேன்
வயிற்றில் கருவாக
நீ வந்த போது
முதன் முதலாய்
உன்னை நான்
சுமந்த போது
சொல்லொண்ணா
மகிழ்ச்சி கொண்டேன்
வாரிசு வந்ததென
உற்றாரும்
அன்பு மகள்
தாயாகிறாள் என
என் பெற்றோரும்
மகிழ்ந்திடவே
நீ பிறந்தாய்
பெண்ணாக
நாளொரு மேனியும்
பொழுதொரு
வண்ணமாய் வளர்ந்தாய் நீ
உன் ஒவ்வொரு
வளர்ச்சியும் பார்த்து
நான் பெருமிதம்
அடைந்த கதை
உனக்கெப்படி தெரியும்?
உன் தாத்தாவும் பாட்டியும்
அறிவார் நன்றே
உறவுகளும் ஒப்புக்கென
எட்டி கூட பார்த்ததில்லை
வருங்கால பணக்காரனாய்
வாழ
நிகழ் காலம் இழந்தே
உன் தந்தை
மழலை மொழி கேட்டிலர்
உன் முதல்
நடை கண்டிலர்
நீயோ சிறு குழந்தை
தகப்பன்
முகம் பாராமல்
ஒட்டிக்கொள்வாய் என்
கை இடுக்கினிலே
அவருடன் நீ
ஓட்டும் போது
பறந்திடுவார் வேலைக்கு
நீயோ இன்று
அழகிய வாலிப பெண்
உன் தந்தையோ
இன்று நம்முடன்
பாசமிக்க மகளாய் நீ
தந்தையின்றி வேறில்லை
உனக்கெதுவும்
நடுவில் வந்தான்
காதலனாய் உனக்கொருவன்
நேற்று வரை நீ
வைத்த அன்பெல்லாம்
இல்லாமல் போனதுவே
எங்கள் மீது
முழு மனதும் அவனிடமே
தொலைத்து தான்
விட்டாயோ?
எங்களுடன் நீ வாழ்ந்த
நீண்ட தொரு காலத்தையும்
ஒரு சில திங்களிலே
இல்லை இல்லை
ஒரு சில நிமிடங்களில்
யாரோ ஒருவனிடம்
கொடுத்து விட்டு
விபத்தில் மண்டை உடைந்து
நினைவு மீண்டும்
திரும்பியவர் போல்
"நீங்கள் எல்லாம் யாரென"
நீ கேட்க்கும் விந்தை தனை
எண்ண எண்ண
வியக்குதே மனம்
கனக்குதே மனம்
அறிய மாட்டாய்
நீ என் துயரை
உனக்கு பிடித்த எல்லாம்
நான் அறிவேன்
உனக்கு பிடித்த
இவனை மட்டும்
நான் அறியேன்
எதை கண்டு
நீ பிடித்தாய் " இவனில்"
நான் குழம்புகிறேன்!!!!!!
"காதலுக்கு கண் இல்லை"
என்போர் பலர்
என்னை கேட்டால்
"காதலுக்கு ஏதும் இல்லை"
அதிலும் "மூளை இல்லை"
என்பேன் நான் நிச்சயமாய்!!!!!!!
என் நினைவெல்லாம்
என் இரவெல்லாம்
உன் நலம் வாழ
வேண்டுகிறேன் இறைவனிடம்
பிறிதொருநாள்
உன் வாழ்வெல்லாம்
கண்ணீராய் மாறாமல்
வேண்டுகிறேன் இறைவனிடம்.
padithathil pidithathu