Author Topic: ~ வெங்காய மருத்துவம்:- ~  (Read 420 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227475
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ வெங்காய மருத்துவம்:- ~
« on: September 29, 2014, 07:39:41 PM »
வெங்காய மருத்துவம்:-




உடலுக்கு எண்ணற்ற நன்மை தரக்கூடியதும், மருத்துவக் குணம் அடங்கியதுமான காய்கறிகளில் முதன்மையானது வெங்காயமே. அடிக்கடி வெங்காயம் உண்பதால் உடல் சூடு தணியும், உள் உறுப்புகளும், எலும்பும் பலம் பெறும். நரம்புகளின் துடிப்பு ஒழுங்குபடுத்தப்படும். தொற்று நோய்கள் வராமல் தடுக்கப்படும். வயிற்றில் உள்ள கிருமிகள் சாகும். ஜீரண ஆற்றல் அதிகரிக்கும். மேற்கண்ட பலன்களைப் பெற காலையில் வெறும் வயிற்றில் இரு சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கிப் பச்சையாக உண்ணவேண்டும். பூச்சி ஏதேனும் கடித்தால் கடிபட்ட இடத்தில் வெங்காயத்தை பாதியாக நறுக்கி தேய்த்தால் விஷம் முறியும். வாந்தி வரும் பொழுது நறுக்கிய வெங்காயத்தை முகர்ந்து பார்த்தால் வாந்தி நிற்கும். இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி தின்றால் இருமல் குணமாகும். வாய்ப்புண்ணிற்கு வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கி நெய்விட்டு வதக்கி பாதி சோறு பாதி வெங்காயம் சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.