பொதுவாக நம்மில் பலர் உப்பு உடல் நலத்திற்குக் கேடு என்றே கருதுகிறோம். மருத்துவர்கள் கூட உப்பின் அளவைக் குறைத்தால் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அறிவுரைகள் கூறுவர். இப்படியிருக்கையில் ஆயுர்வேதமும் நாட்டு வைத்தியர்களும் இதற்கு முரண் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சுத்தமான இயற்கை உப்பு உடல் ஆரோக்கியத்தைப் பேணவும், வாழ்க்கை செயல்முறைகளைத் துவக்கவும் மிகவும் முக்கியமானது என்கின்றனர். இன்றைய தூய்மை இல்லாத சூழலில் மனிதர்கள் நாம் பலவாறான நச்சுப் பொருள்களின் தாக்கத்திற்கு இலக்காகிறோம். இதன் விளைவாக உடலின் நச்சுத் தன்மையின் அளவு அதிகரிக்கின்றது. அளவுக்கதிகமான நச்சுப் பொருள்களை சரிவர சுத்திகரிப்பு செய்ய முடியா நிலை ஏற்படும்போது உடலின் அமிலத் தன்மையும் அதிகரிக்கும். அமிலத் தன்மையின் அளவு உடலில் அதிகமாகும் பொழுது, மனிதனின் உடல் வைரசு, கிருமி போன்ற நுண்ணுயிரிகளின் தாக்கத்திற்கு இலக்காகும் அபாயமும் அதிகரிக்கின்றது. எனவே, உடலில் நிலையான அமிலத் தன்மையை ஏற்படுத்த உப்புத் தேவைப்படுகின்றது. அதிகமான உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூளையின் செயல்பாடுகளும் அதிகரிக்கின்றது. மேலும், சோர்வின்மை, உடல் புத்துணர்ச்சி, சிறந்த செரிமானச் சக்தியையும் உப்பைச் சேர்ப்பதன் மூலம் நாம் பெறலாம் என நாட்டு வைத்தியர்கள் கூறுகின்றனர்.
ஒரு பக்கம் மருத்துவர்கள், இன்னுமொரு பக்கம் நாட்டு வைத்தியர்கள். இதில் யாரை நீங்கள் நம்புவீர்கள் நண்பர்களே?