Author Topic: ஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி ?  (Read 2242 times)

Offline Maran


பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.

அஞ்ஞான வாசம் முடிந்த பின் அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அவர்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.