Author Topic: கொழுப்பு நீக்கப்பட்ட பால் இதயத்தைப் பாதிக்கும்  (Read 451 times)

Offline Little Heart

நீங்கள் உங்கள் உடல் நலனைக் கருத்தில் கொள்பவர் என்றால் கண்டிப்பாக ஒவ்வொரு உணவிலும் உள்ள நிறை, குறைகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இதில் பெரும்பாலானோர் கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் குடிப்பவர்களாக இருப்பீர்கள். அதற்குக் காரணமாக, அனைத்து வைட்டமின்களும் இருப்பதாகவும், உடலுக்கு நலத்தினைக் கொடுக்கும் என்றும் கூறுவர். ஆனால், இந்தக் கொழுப்பு நீக்கப்பட்ட பால் சாதாரணமான பாலை விட குறைந்தளவு மட்டுமே பலன் தரக்கூடியது எனப் பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பாலில் இருந்து கொழுப்பை நீக்கும்போது பலவித முக்கிய வைட்டமின்களும் அதிலிருந்து நீக்கப்படுகின்றன. இதனால் அது செயற்கையான பால் போலவே செயல்படுகிறது என்று இதற்கான காரணத்தைச் சாதாரணமாக விளக்குகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது மட்டுமில்லாமல் இந்தப் பாலை உருவாக்குபவர்கள், பாலுக்கு வலுசேர்க்கும் விதமாகப் பால் பொடி போன்ற பொருட்களைச் சேர்ப்பதால், பாலிலுள்ள கொழுப்புகள் அனைத்தும் ஆக்ஸிஜனேற்றம் அடைகின்றது. இதன்னால் பெருந்தமனியில் பிரச்சனை ஏற்படும் (இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய் தொடர்பான நோயின் ஒரு நிலை).

உடலுக்கு நன்மை செய்கிறோம் என்ற நினைப்பில் எவ்வளவு தீமை செய்கின்றோம் என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகிவிட்டது நண்பர்களே.