Author Topic: குலுக்கப்பட்ட சோடாவும் அறிவியலும்  (Read 451 times)

Offline Little Heart

இந்த விஷயத்தை நாம் எல்லோருமே அனுபவித்து இருப்போம், ஒரு சோடாவை அதன் கேனுடன் சேர்த்துக் குலுக்கிவிட்டுத் தலைப்பகுதி வழியே திறக்கும்போது, பெரும்பாலான சோடா பொங்கி வழிந்துவிடும். இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்குத் தெரியுமா, நண்பர்களே? இல்லை என்றால் இந்த அறிவு டோஸைக் கண்டிப்பாகப் படியுங்கள்!

நாம் சோடாவைக் குலுக்கும்போது, ஒழுங்கற்ற சோடாவின் அமைப்புக் காரணமாக அதன் சமநிலை பாதிக்கப்படுகிறது. அதனைச் சமநிலைக்குக் கொண்டுவர சோடா முயற்சி செய்யும். அப்போது மேலுதைப்பு விசைகள் (buoyant forces) சோடாவின் மேற்பரப்பில் இருந்து தனியாக விலகும் வரை கரியமிலவாயு குமிழிகளாக மாறுவது அதிகரிக்கும். ஒரு குமிழி தோன்றிய அதே இடத்திலிருந்து, அடுத்தடுத்து குமிழிகள் உருவாகத் தொடங்கும்.

இதனால் தான் நாம் மேற்புறமாக தட்டிவிட்டுத் திறந்தாலும் சோடா பொங்கி வழிகிறது. சோடா கேனை பக்கவாட்டில் தட்டிவிட்டு திறக்கும்போது, இது தவிர்க்க வாய்ப்புகள் அதிகமுள்ளது. அவ்வாறு செய்யும் போது குமிழிகள் ஏற்படுவதை நிறுத்த முடியும். இது அறிந்திருக்க வேண்டிய விடயம் தானே? இது உங்களுக்கு முன்பே தெரியுமா?