Author Topic: ~ ஆடுதின்னாப் பாளை - சிறு செடியின் மருத்துவ குணங்கள்:- ~  (Read 469 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227473
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஆடுதின்னாப் பாளை - சிறு செடியின் மருத்துவ குணங்கள்:-




மாற்றடுக்கில் அமைந்த வெள்ளைப் பூச்சுள்ள முட்டை வடிவ இலைகளையுடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி. முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்களையுடையது. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் கரிசல் நிலத்தில் வளர்கிறது. பங்கம்பாளை என்றும் அழைப்பதுண்டு. எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை.

வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்ககைத் துண்டும் மருந்தாகவும் பேறு கால வலியை மிகுக்கும் மருந்தாகவும் பயன்படும்.

1. 10 மி.லி. இலைச்சாறு காலை மாலை குடித்துவர ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். விட்டுவிட்டுவரும் காய்ச்சல் குணமாகும்.

2. இலைச்சூரணம் 2 சிட்டிகை வெந்நீரில் கொள்ளப் பாம்பு விஷம், சில் விஷம், மலக் கிருமிகள், கருங்குட்டம், யானைத் தோல் சொறி தீரும்.

3. வேரை அரைத்துக் காலை, மாலை 5 கிராம் கொடுத்துக் கடும் பத்தியத்தில் வைக்க (புதுப்பனையில் உப்பில்லாத பச்சரிசி பொங்கல், 24 மணி நேரம் தூங்க விடக் கூடாது) 3 நாள்களில் எல்லா விதப் பாம்பு நஞ்சும் தீரும்.

4. வேர்ச் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனை தீர்ந்து சுகப்பேறு ஆகும்.

5. விதைச் சூரணம் 5 கிராம் விளக்கெண்ணெயில் கொடுக்க நன்கு பேதியாகி வயிற்றுவலி, சூதகத்தடை, மலக்கிருமிகள் நீங்கும்.