Author Topic: ~ மின்சார சாதனங்களை முறையாக பயன்படுத்த டிப்ஸ்! ~  (Read 848 times)

Offline MysteRy

மின்சார சாதனங்களை முறையாக பயன்படுத்த  டிப்ஸ்!



மிக்ஸியை ஈரக்கையால் கையாளக் கூடாது. அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றி அரைப்பதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீர், மிளகாய்ப்பொடி உள்ளிட்டவை மிக்ஸியின் உட்புறம் சென்று ஷாக் ஏற்படுத்த வாய்ப்பிருப் பதால், வருடம் ஒருமுறையாவது சர்வீஸ் செய்வது நல்லது.

 அயர்ன் பாக்ஸை சர்வீஸ் செய்யும்போது, அதில் உள்ள எலிமென்டை மாற்றினாலும், அதன் செயல்பாடு சீக்கிரமே நின்றுபோக வாய்ப்புள்ளதால், அயர்ன் பாக்ஸை புதிதாக மாற்றிவிடுவது நல்லது. தண்ணீர் தெளித்து அயர்ன் செய்வதைத் தவிர்க்கவும். 


 வாட்டர் ஹீட்டரைப் பொறுத்தவரை பிளக் பாயின்டை நேரடியாக சர்க்யூட் பிரேக்கருடன் பொருத்துவது மிகமுக்கி யம். வாட்டர் ஹீட்டர் ஸ்விட்ச்சை பாத்ரூமுக்கு வெளியே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். ஹீட்டரை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு குளிப்பது முக்கியம்.
இதில் உள்ள எலிமென்ட் துரு பிடித்துள்ளதா என்று கண்காணிக்க வேண்டும். வருடத்துக்கு ஒரு தடவையாவது எலிமென்டை மாற்றுவது அவசியம்.

 சோலார் வாட்டர் ஹீட்டர்கள் மிகவும் பாதுகாப்பானவை.

 மின்சாதனங்கள் அனைத்தையும் முறையாக சர்வீஸ் செய்து வரவேண்டும்.

 ஐ.எஸ்.ஐ. தர முத்திரை பதிக்கப்பட்டுள்ள மின்சாதனப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். உயர் மின்னழுத்த சாதனங்களுக்கு மூன்று பாயின்ட் பின்களை பயன்படுத்துவது அவசியம்.

 பழைய வீடுகளில் வொயர்கள் நல்ல நிலையில் இருக்கின்றனவா என்பதை சரி பார்க்க வேண்டும். புதிய வீடுகளாக இருந்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வொயரின் நிலையை சரிபார்ப்பது அவசியம்.  பி.வி.சி வொயர்களையே பயன்படுத்த வேண்டும். 

 உயர்மின் அழுத்தத்தில் இயங்கக்கூடிய வாட்டர் ஹீட்டர், ஏர்கண்டிஷனர், மைக்ரோவேவ் அவன் உள்ளிட்ட சாதனங்கள், 16 ஆர்ம்ஸ் ஸ்விட்ச்கள் மூலம் இயங்குவது போல பார்த்துக்கொள்ள வேண்டும். பிளக்குகள் லூஸாக இருந்தால் தீப்பிடிக்கும் வாய்ப்பு உண்டு.