Author Topic: ~ இண்டு - மருத்துவ குணங்கள்:- ~  (Read 462 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227473
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இண்டு - மருத்துவ குணங்கள்:-




சிறகமைப்புக் கூட்டிலைகளையும் வளைந்த கூரிய முட்கள் நிறைந்த வெண்மையான தண்டினையும் உடைய ஏறு கொடி. தமிழகமெங்கும் சிறு காடுகளிலும், பெரும் வேலிகளிலும் தானே வளர்வது. இலை, தண்டு ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

கோழையகற்றுதல், நாடி நடையும், உடல் வெப்பத்தையும் அதிகரித்தல் ஆகிய குணங்களை உடையது.

1. இண்டந்தண்டை துண்டாக நறுக்கி ஒரு புறம் வாயினால் ஊத மறுபுறம் சாறு வரும். அவ்வாறு எடுத்த சாறு 15 மி.லி. யில் திப்பிலியின் பொடி, பொரித்த வெங்காயம் வகைக்கு 1 கிராம் சேர்த்துக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க ஈளை, இருமல் குணமாகும்.

2. மேற்கண்ட மருந்தை 1 தேக்கரண்டி வீதம் குழந்தைகளுக்குக் கொடுக்கச் சளி, மாந்தம் ஆகியவை தீரும்.

3. இண்டங்கொடிச் சமூலம், தூதுவேளை, கண்டங்கத்திரி வகைக்கு 1 பிடி திப்பிலி, பூண்டு வகைக்கு 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி காலை, மாலை 100 மி.லி. வீதம் கொடுத்து வர இரைப்பிருமல் தீரும். குழந்தைகளுக்கு 25 மி.லி. ஆகக் கொடுக்கலாம்.

4. இண்டம் வேர், தூதுவேளை வேர் வகைக்கு 2 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி ஆகக் காலை, மாலை சாப்பிட இரைப்பிருமல் தீரும்.

5. இண்டம் இலை, சங்கிலை, தூதுவேளையிலை, திப்பிலி, சுக்கு வகைக்கு 20 கிராம் 1 லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி ஆகக் காலை, மாலை சாப்பிட இருமல் தீரும்.