Author Topic: ~ நெட் பேங்கிங்: பாஸ்வேர்டு ஜாக்கிரதை! ~  (Read 791 times)

Offline MysteRy

நெட் பேங்கிங்: பாஸ்வேர்டு ஜாக்கிரதை!



இன்டெர்நெட் மூலமாக வங்கி சேவைகளைப் பயன்படுத்தும்போது, பல ஆஃபர் பக்கங்கள் தானாகவே ஓபன் ஆகும். பெரும்பாலும் அவையெல்லாம் நம்பத்தகுந்தவை இல்லை. எனவே, அந்தப் பக்கங்களைப் பயன்படுத்தி ஷாப்பிங் போன்றவற்றை மேற்கொள்ளாதீர் கள். மீறி பயன்படுத்தினால், வங்கி பரிமாற்றத்துக்கான உங்களுடைய பாஸ்வேர்டு உள்ளிட்டவை திருடப்படும் வாய்ப்பிருக்கிறது. பிறகு, உங்களுக்குத் தெரியாமலே உங்கள் பணம் கொள்ளை போகலாம் ஜாக்கிரதை.

பென்டிரைவ்:  வைரஸ் ஸ்கேன்!



எந்த ஒரு பென்டிரைவ்வை பயன்படுத்தும் முன்பாகவும், அதை ஸ்கேன் செய்த பிறகே பயன்படுத்துவது நல்லது. சிலர், 'என் பென்டிரைவ்ல எல்லாம் வைரஸ் இல்லவே இல்லை’ என்று சொன்னாலும், ஸ்கேன் செய்யாமல் பயன்படுத்தாதீர்கள்.