Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 127230 times)

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #540 on: April 21, 2025, 05:13:20 PM »
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல


விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை


அடுத்த குறள்
🪷 தக்கார் ---------- என்பது அவ--------
எச்ச-----காணப்----------

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #541 on: April 21, 2025, 07:03:41 PM »
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

ஒருவர் தகுதியாளர், மற்றவர் தகுதியற்றவர் என்று உரைப்பது எல்லாம், அவரவரது எஞ்சி நிற்கும் புகழும் பழியும் என்பனவற்றால் காணப்படும்...


அடுத்த குறள்:-
______இன்சொலன் ____ ஒருவற்கு
_______ மற்றுப் ____.

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #542 on: April 23, 2025, 12:53:02 PM »
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற


பணிவு உடையவனாகவும், இனிதாகச் சொல்பவனாகவும் ஆகுதல், ஒருவனுக்கு அணிகலனாகும்; பிறவெல்லாம் அணிகலன்கள் ஆகா 


அடுத்த குறள்
🪷 வைய----------- ------------ -------பவன் -------
தெய்வ------- வைக்கப் -----

Online Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #543 on: May 03, 2025, 12:27:17 AM »
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

உலகத்துள் வாழும் நெறிப்படியே வாழ்பவன், வானகத்தே வாழும் தெய்வத்துள் ஒருவனாகக் கருதி நன்கு மதிக்கப்படுவான் 

NEXT 🌹.....றுலகம் வழங்கி......
தானமிழ்தம் .......பாற்று

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #544 on: May 03, 2025, 03:31:44 PM »
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று


மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்



அடுத்த குறள்
🪷விண்----- ------ விரிநீர்
விய----------- -----நின்று ...

Online Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #545 on: May 03, 2025, 04:57:02 PM »
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி

மழை காலத்தால் பெய்யாது, பொய்க்குமானால், கடலால் சூழப்பட்டுள்ள இப்பரந்த உலகினுள் பசி நிலைபெற்று உயிர்களை வாட்டும் 

🌹ஏரின் ........ உழவர்........
வாரி வளங்குன்றிக்.......

Offline KS Saravanan

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #546 on: May 03, 2025, 05:09:39 PM »
ஏரின் நிலைத்ததூஉம் ஈனும் அறிகொன்று
வாரி வளங்குன்றிக் கால்.

பொருள்:
பயிர் அளவை நிலைநிறுத்துவது ஏரிக்குத் தான் வழி; ஆனால், அந்த ஏரிக்கே தண்ணீர் வழங்கும் வளம் குறைந்துவிட்டால், அது (பயிர்) கொடுக்கும் அளவு குறையும் என்பது உண்மை.

இந்தக் குறள் வளம் குறைவால் உண்டாகும் விளைவுகளை எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக வேளாண்மை சார்ந்த சூழ்நிலைகளை.


NEXT

இழுக்கல்........ ஒள்ளார்செய்........
பழிக்கும் ........... நூல்.
« Last Edit: May 03, 2025, 05:11:49 PM by KS Saravanan »