Author Topic: ~ முருகா என்றால் : ~  (Read 992 times)

Offline MysteRy

~ முருகா என்றால் : ~
« on: August 24, 2014, 07:55:01 PM »
முருகா என்றால் :




ஒருவன் மேற்கொள்ளும் செயல்களிலே வெற்றி பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது அவனுள் முருகனருளால் உணர்த்தப்படும்.முருகனருள் பெற அந்த செயல் செய்வோன் முருகனது திருவடியைப் பற்றி மனமுருகி வணங்கிமுருகா நான் இன்றுமுதல் உயிர்க்கொலை செய்யமாட்டேன், புலால் உண்ண மாட்டேன், பிறஉயிர்களுக்கு தீங்கு செய்ய மாட்டேன், பிறர் பொருளை வஞ்சனையாக அபகரிக்க மாட்டேன், சாதி, மத, இன, மொழி பாகுபாடு பார்க்க மாட்டேன், பொருள் மீது வெறிகொண்டு பற்றுமிகுந்து பொருள்மீது அதீத இச்சை கொள்ள மாட்டேன், பிறர் வளர்ச்சி கண்டு பொறாமை கொள்ள மாட்டேன். இது உமது திருவடிக்கு சமர்ப்பிக்கின்றேன்.இச்செயல்களை செய்யாதிருக்க எம்மால் ஆகாது. இவை என்னை வஞ்சித்து விடாமல் என்னை காத்தருள்.