காளான் புலாவ்
தேவையானவை:
காளான் (நறுக்கியது) - ஒரு கப், பாஸ்மதி அரிசி - 400 கிராம், தண்ணீர் - 750 மில்லி, பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய் (எல்லாம் சேர்த்து) - 5 கிராம், கடலை எண்ணெய் - 100 மில்லி, நெய் - சிறிதளவு, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கீறிய பச்சை மிளகாய் - 4, நறுக்கிய கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியைக் கழுவி சிறிது நேரம் ஊறவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய், நெய் விட்டு பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கிளறவும். அரிசி சிறிது வெந்தவுடன் மூடி போட்டு 'தம்’ செய்யவும். காளானை வெண்ணெயில் வறுத்து பிரியாணியின் மேல் சேர்க்கவும். காளான் புலாவ் தயார்.