Author Topic: ~ கள்ளிப்புறா பற்றிய தகவல்கள்:- ~  (Read 645 times)

Online MysteRy

கள்ளிப்புறா பற்றிய தகவல்கள்:-




கள்ளிப்புறா(உயிரியல் பெயர்:ஸ்டிக்மாதோப்பெலிய செனேகாளென்சிஸ்) (லாஃபிங்க் டவ்), சிரிக்கும் புறா என்றும் அழைக்கப்படுகிறது. இது சிறியவகை புறா இனத்தைச் சார்ந்தது.ஆப்பிரிக்காவின் தெற்கு சகாராப் பகுதிகளிலும்,அரபு நாடுகளிலும்,கிழக்கு ஆசிய கண்டத்தில் இருந்து இந்தியா வரையிலும், மேற்கு ஆஸ்திரேலியா பகுதியில் காணப்படுகிறது. அந்தந்த பகுதிகளில் செவ்வனே இனப்பெருக்கமும் செய்யும் இயல்புடையதாக இருக்கிறன.

இப்புறாவானது, சிறும்புறா இனமாகும்.நீளமான இறகுகளை உடைய இவை, அளவு 25 செ.மீ. இருக்கும். இறக்கைகளும், வாலும் சிவப்பு கலந்து பழுப்பு நிறத்திலும், இறக்கையில் சாம்பல் நிறமும் கலந்து இருக்கும்.தொண்டையில் கரும்புள்ளிகள் காணப்படுகிறது. தலைப்பகுதி இளஞ்சிவப்பிலும், வயிற்றுப் பகுதியில் வெள்ளைநிறப்பரவலும் அமைந்துள்ளது.

இவை குச்சிக்களைக் கொண்டு, கூடுகளை, மரத்தின் மேற்புறத்திலேயேக் கட்டுகின்றன. தனது இணையுடன் கடைசி வரையில் வாழ்கிறது.

விதைகள், புற்கள், தானியங்களை பெரும்பாலும் உண்ணுகின்றன. அவ்வப்பொழுது, சிறு பூச்சிகளையும் உண்ணுகின்றன.

வெள்ளை நிறத்தில், இரு முட்டைகளை மட்டுமே இடுகின்றன.