Author Topic: ~ உலர் பழங்களில் உள்ள சத்துக்கள்:- ~  (Read 397 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227473
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உலர் பழங்களில் உள்ள சத்துக்கள்:-




• அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

• உலர்ந்த ப்ளம்ஸை, மல்டி-வைட்டமின் மாத்திரை என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின்கள் உள்ளது மேலும் இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.

• பெர்ரிப் பழங்களில் ஒன்றான ப்ளூபெர்ரியிலும், உலர்ந்து இருக்கிறது. இந்த உலர் ப்ளூபெர்ரியில் வைட்டமின் சி, பி மற்றும் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளது. இது மைய நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள் உள்ளடக்கியது.

• கோடையில் மட்டும் கிடைக்கும் மாம்பழத்தை வருடம் முழுவதும் சாப்பிடுவதற்கு தான் உலர் மாம்பழங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த உலர் மாம்பழங்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை உள்ளன. அதுமட்டுமின்றி இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளன.

• ஆப்ரிக்காட் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதவும் இது டயட்டில் இருப்போருக்கு மிகவும் சிறந்த ஸ்நாக்ஸ்.

• உலர்ந்த செர்ரி பழத்திலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இது டெசர்ட் உணவுகளில் டாப்பிங்கிற்கு ஏற்றதும் கூட.

• கிரான்பெர்ரியில் (க்ர்யாந்‌பெரீ) நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். அதேப் போன்று உலர்ந்த கிரான்பெர்ரியை அதிகம் சாப்பிட்டாலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிலும் சிறுநீர் தொற்று அல்லது இருமல் மற்றும் சளி இருப்பவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.