Author Topic: ~ உழவு பழமொழிகள் !!! ~  (Read 856 times)

Online MysteRy

~ உழவு பழமொழிகள் !!! ~
« on: August 21, 2014, 08:18:22 PM »
உழவு பழமொழிகள் !!!




1. உழவுக்காலத்தில் ஊரைவிட்டே போய்விட்டால், அறுவடைக் காலத்தில் ஆள் தேட வேண்டாம்.

2. உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?

3. உழுவோர் உழைப்பால்தான் உலகோர் பிழைப்பார்.

4. உழவு அற உழுதவன் ஊரில் பெரியவன்!

5. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.

6. பாவி பாவம் பதராய் விளையும்.

7. அவரைக்கு ஒரு செடி ஆதீனத்துக்கு ஒரு பிள்ளை.

8. ஆடி மாதம் அவரை போட்டால், கார்த்திகை மாதம் காய் காக்கும்.

9. ஏற்றப்பாட்டுக்கு எதிர்பாட்டில்லை; பூசாரி பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை.