Author Topic: ~ டிப்ஸ்... டிப்ஸ்... ~  (Read 673 times)

Offline MysteRy

~ டிப்ஸ்... டிப்ஸ்... ~
« on: July 07, 2014, 11:23:25 AM »
டிப்ஸ்... டிப்ஸ்...

சாம்பார் செய்யும்போது, புளியின் அளவைக் குறைத்து அல்லது புளியை முற்றிலும் தவிர்த்து, தக்காளிப் பழங்களைச் சேர்த்துக் கொதிக்கவிட்டால், சுவை கூடுவதுடன், எல்லாவித டிபன் வகைகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ்ஷாகவும் அமையும்.

Offline MysteRy

Re: ~ டிப்ஸ்... டிப்ஸ்... ~
« Reply #1 on: July 07, 2014, 11:23:52 AM »
போண்டா, வடை முதலியவற்றுக்கு உளுந்து மாவு அரைக்கும்போது, வேகவைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். இந்த மாவில் போண்டா அல்லது வடை பொரித்தெடுத்தால், மேலே கரகரவென்றும், உள்ளே மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

Offline MysteRy

Re: ~ டிப்ஸ்... டிப்ஸ்... ~
« Reply #2 on: July 07, 2014, 11:25:32 AM »
ரவை, கோதுமை மாவு, அரிசி மாவு போன்றவற்றை கலந்து கரைத்த தோசை செய்யும்போது சுவையைக் கூட்ட இதோ ஐடியா! மிளகாய், கறிவேப்பிலை (விருப்பப் பட்டால் ஒரு துண்டு வெங்காயம்) ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொண்டு, அதில் கடுகு தாளித்து, மாவு வகைகளை சேர்த்துக் கரைத்து, தோசை வார்த்தால்... அருமையான சுவையுடன் இருக்கும்.



இட்லி, தோசை மாவு புளித்துவிட்டதா...? கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, இத்துடன் மாவையும் கலந்து, கெட்டியான தோசைகளாக வார்த்து, மேலே பொடியாக அரிந்த வெங்காயம் தூவி சுட்டெடுத்தால்... பசுமையான, சுவையான ஊத்தப்பம் தயார்.



மாங்காயைத் துருவி  பொரித்த குழம்பு மற்றும் கூட்டு வகைகளில் கடைசியாகப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கினால், சுவை கூடும் (மாங்காய் சீஸனில் மாங்காய்கள் வாங்கி, துருவி, வெயிலில் காயவைத்து, பொடித்து, ஆம்சூர் பொடியாக்கி வைத்துக் கொண்டு இப்படி உபயோகித்துக் கொள்ளலாம்).

Offline MysteRy

Re: ~ டிப்ஸ்... டிப்ஸ்... ~
« Reply #3 on: July 07, 2014, 11:26:06 AM »
உப்புமா வகைகள், கலந்த சாத வகைகள், வெண் பொங்கல் முதலியவற்றைப் பரிமாறும்போது, மேலே ஓமப்பொடி, காராபூந்தி, மிக்ஸர் போன்ற ஏதாவதொன்றைத் தூவிப் பரிமாறினால், அந்த டிபனில் கரகரப்பு கூடி, ரசித்துச் சாப்பிட வைக்கும்.