புள்ளி மான்கள் பற்றிய தகவல்கள்:-

புள்ளி மான் இந்தியா, இலங்கை, நேப்பாளம், வங்கதேசம், பூட்டான் ஆகிய நாடுகளின் காட்டுப்பகுதிகளில் வாழும் ஒரு வகை மானினம். இது பாக்கித்தானிலும் சிறு அளவில் காணப்படுகிறது. இந்தியக் காடுகளில் அதிகம் காணப்படும் மானினம் இதுவேயாகும்.
இதன் தோல் பழுப்பு நிறத்திலும் வெள்ளைப் புள்ளிகளுடனும் காணப்படும். இதன் காரணமாகவே இது புள்ளிமான் என்றழைக்கப்படுகிறது. இதன் அடிப்பாகம் வெண்ணிறத்தில் இருக்கும். இது ஆண்டுக்கு ஒரு முறை கொம்பினைஉதிர்க்கும். பொதுவாக மூன்று கிளைகளாகப் பிரிந்திருக்கும் இதன் கொம்பு இரண்டரை அடி நீளம் வரை வளரும். மூன்று அடி உயரம் வரையும் 85 கிலோ எடை வரையும் புள்ளிமான்கள் வளரும். ஆண் மான்கள் பெட்டைகளை விடப் உருவில் பெரிதாக இருக்கும். இது 8 முதல் 14 ஆண்டுகள் வரை வாழும்.