Author Topic: ஏனோ வரவில்லை இன்று உறக்கம் தரவில்லை  (Read 651 times)

Offline Software

காதல் வலி கூடுதடி
பூத்திருக்கும் விழி இரண்டும்
நீர்க்குமிழி ஆனதடி

மாலை வண்ணம் மங்குதடி
மதி அழகு கூடுதடி
காக்கை குருவி மடையான் எல்லாம்
கண் உறங்கப் போகுதடி

காற்றும் வந்து போன தடம்
பார்த்து நின்றேன் காதலியே
நித்தம் நீ வரும் நேரம்
நிழலாய் நகர்ந்து போனதடி

சுகம்தானா கண்மணியே
நலம்தானா காதலியே
மனதில் ஏதேனும்
கலக்கம் கொண்டாயோ
நெஞ்சம் வாடுதடி
உன் வரவைத் தேடுதடி..

காலம் என்னும் சேற்றினிலே
கால் இரண்டும் சிக்கி நிற்க
பாவி இவன் ஆவி மட்டும்
உன் கூடு தேடிப் போகுதடி..
By

Ungal Softy

Offline Maran



ம்ம்...  continue பண்ணுங்கோ... software நண்பா ... காதல்னா அப்டிதான்... 

மழை நீர் குளிர்கின்றதே
கடல் நீர் கரிகின்றதே
இளநீர் சுவைகின்றதே
கண்ணீர் சுடுகின்றதே
தண்ணீர் சுவைகின்றதே
இவை எல்லம் பெண்ணே உன்னாலே

மரம்போல் எழுந்தால்
வேர்போல் தாங்குவேன்


நெத்துச்சுட்டி பின் நெற்றிக்கண் மறைத்தவளே

உனக்காக காத்திருக்கும் என் தோள்களில்
உன் தலையிற்கு ஓய்வுகொடுப்பது அழகு...  :)



Offline Software

மிக்க நன்றி நண்பா  !
By

Ungal Softy

Offline NasRiYa

காலம் என்னும் சேற்றினிலே
கால் இரண்டும் சிக்கி நிற்க
பாவி இவன் ஆவி மட்டும்
உன் கூடு தேடிப் போகுதடி.. ஆஹா அருமை ! காதலின் ஏக்கம் இனிய கவியோட்டத்துடன்  ;D ;D ;D ;D ;D ;D



Offline Software

எல்லாம் உனக்காக தான் nasi
By

Ungal Softy