கம் எப்படி தயாரிக்கப்படுகிறது?

இயற்கையாக கம் என்கிற பசை மரங்களின் பிசின்களிலிருந்து பெறப்பட்டது. கம் அராபிக்கா என்று அதற்குப் பெயர்.
கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் கம் உருளைக்கிழங்கு மாவில் செய்யப்படுகிறது. உருளைக் கிழங்கு ஸ்டார்ச் மாவு தண்ணீரில் கரையாது. ஆனால் கொதிக்கும் தண்ணீரில் போட்டால் மாவு விரிந்து வெடித்து கொலாய்டு போல ஆகிவிடும். இதனுடன் துத்தநாகக் குளோரைடு (ஸிங்க் குளோரைடு மற்றும் கால்சியம் குளோரைடு கலக்கப்படும். இவை இரண்டும் பசைக்கு கெட்டித் தன்மையையும் பூஞ்சை, பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் வளர்ச்சியை தடுக்கும் தன்மையையும் தருகின்றன.