Author Topic: ~ இறால் - கேரட் வடை ~  (Read 416 times)

Offline MysteRy

~ இறால் - கேரட் வடை ~
« on: June 03, 2014, 11:46:02 AM »
இறால் - கேரட் வடை



தேவையானவை:
இறால் - 250 கிராம், சோம்புத்தூள் - 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 2, கேரட் - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல்,  மட்டன் மசாலா தூள் - ஒரு டீஸ்பூன், ரொட்டித்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 300 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
இறாலை நன்கு சுத்தம் செய்து, கழுவி, தண்ணீரை வடிகட்டி பிழிந்து வைக்கவும். கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை தோலுரித்து துருவி வைக்கவும். கேரட்டையும் துருவி வைக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் தோலுரித்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
இறாலையும், பச்சை மிளகாயையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, அத்துடன் எலுமிச்சைச் சாறு, சோம்புத்தூள், வெங்காயத் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லித் தழை,  மட்டன் மசாலா தூள், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, ரொட்டித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாகப் பிசையவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் இறால் கலவையை தேவையான அளவு எடுத்து வட்டமாகத் தட்டி, எண்ணெயில் போட்டு, இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்ததால்...  அசத்தல் சுவையில் இறால் வடை தயார்.