Author Topic: ~ தேள்கடி விஷம் நீங்க...இய‌ற்கை வைத்தியம் :- ~  (Read 631 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227463
  • Total likes: 29059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தேள்கடி விஷம் நீங்க...இய‌ற்கை வைத்தியம் :-




* சீரகத்தை பொடிசெய்து அதனுடன் சிறிதளவு உப்பு, தேன் கலந்து சிறிது வெண்ணெய் சேர்த்து தேள் கடித்த இடத்தில் பூசி வந்தால் விஷம் எளிதில் முறியும்.

* 20 மிளகை எடுத்து தேங்காயுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட்டு வந்தால் தேள்கடி விஷம் குறையும். -

* தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்கவில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.

* எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேள் கடி விஷம் இறங்கும்.

* நவச்சாரத்தில் (அம்மோனியா உப்பு) சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி வலி குறையும்.

* 20 மிளகை எடுத்து தேங்காயுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட்டு வந்தால் தேள்கடி விஷம் குறையும்.

* தூள் செய்த உப்பு இரண்டு தேக்கரண்டியுடன் மயில் துத்தத்தையும் தூள் செய்து கலந்து தேள் கொட்டிய வாயில் வைத்து அழுந்தக் கட்டினால் தேள் கடி விஷம் குறையும்.

* தேள் கொட்டினால் உடனெ வெள்ளைப்பூண்டை அரைத்து கொட்டிய இடத்தில் தடவி வந்தால் தேள் கொட்டிய விஷம் மற்றும் வலி குறையும்

* தேள் கொட்டினால் உடனே புளியை கரைத்து சிறிது குடித்து விட்டு தேள் கொட்டிய இடத்திலும் புளியை தடவி வந்தால் விஷம் குறையும்.