Author Topic: ~ காடை பறவைகள் பற்றிய தகவல்கள்:- ~  (Read 1105 times)

Online MysteRy

காடை பறவைகள் பற்றிய தகவல்கள்:-




காடை (Quail) என்பது ஃபசியானிடே குடும்பத்தில் உள்ள நடுத்தர அளவு கொண்ட பல பறவைப் பேரினங்களைக் குறிக்கும் பெயர்ச்சொல்லாகும். காடை இனங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புகொண்டவை அல்ல. எனினும், அவற்றின் தோற்றம் மற்றும் பழக்க வழக்கங்களின் காரணமாகக் காடைகள் என்ற ஒரே பெயரில் வழங்கப்படுகின்றன.

காடைகள் சிறிய பருத்த நிலத்தில் வாழும் பறவைகள் ஆகும். இவை தானியங்களை உண்கின்றன. நிலத்தில் கூடு கட்டி வாழும் இவை, வேகமாக குறுந்தொலைவு பறக்கக்கூடியன. ஜப்பானியக் காடைகள் போன்ற சில இனங்கள், பறந்து நெடுந்தொலைவு இடம் பெயரக்கூடியன. சிலவகைக் காடைகள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. ஜப்பானியக் காடைகள் (Coturnix quail) பெருமளவில் முட்டைக்காகவே வளர்க்கப்படுகின்றன.

நியூசிலாந்து காடை, பாப் வெள்ளைக் காடை, சைனாக் காடை, மடகாஸ்கர் காடை, கலிபோர்னியா காடை, நியூகினியா காடை, ஜப்பானியக் காடை போன்றவை காடை இனங்களாகும்.

காடை வளர்ப்பு பிரபல தொழிலாக வளர்ந்து வருகிறது. இவை பண்ணை முறையில் கூடுகளில் வளர்க்கப்படுகின்றன.