Author Topic: ~ மாதுளம் பூ துவையல் ~  (Read 450 times)

Offline MysteRy

~ மாதுளம் பூ துவையல் ~
« on: April 29, 2014, 01:45:56 PM »
மாதுளம் பூ துவையல்



தேவையானவை:
மாதுளம்பூ - 100 கிராம், மிளகு, சீரகம் - தலா ஒரு டீ ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 6 பல், கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு கையளவு, பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவைக்குத் தக்கபடி.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். லேசாக வதங்கியதும் கறுப்பு உளுந்து, தேங்காய்த் துருவல், அரிந்த பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும். இறுதியில், பொடியாக நறுக்கிய மாதுளம்பூவைப் போட்டு நன்கு வதக்கவும். இதை உப்பு சேர்த்துத் துவையலாக அரைக்கவும்.

மருத்துவப் பயன்:
வாய்ப் புண், குடல் புண் ஆகியவற்றை ஆற்றும். ரத்த மூலத்தைக் குணப்படுத்தும். வெள்ளைப்படுதலைக் கட்டுப்படுத்தும். இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்தது. ரத்த விருத்தியை அதிகப்படுத்தும். உடல் உஷ்ணத்தைக் குறைத்துக் குளிர்ச்சியைத் தரும்.