என்னென்ன தேவை?
நறுக்கிய பாலக் கீரை - 1 கப்,
சோள மாவு, அரிசி மாவு, மைதா, கடலை மாவு (நான்கும் சேர்த்து) - 1 கப்,
இடித்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து - 1 டீஸ்பூன்,
சோம்பு - 1/2 டீஸ்பூன், உப்பு,
காய்ச்சிய எண்ணெய் - சிறிதளவு,
எண்ணெய் - 1/4 கிலோ.
எப்படிச் செய்வது?
மாவு வகைகள், இடித்த மசாலா, சோம்பு, உப்பு, காய்ச்சிய எண்ணெய் எல்லாவற்றையும் பாலக் கீரையுடன் சேர்த்து நீர் விட்டுப் பிசறி சூடான எண்ணெயில்பொரித்தெடுக்கவும்.