Author Topic: Simple... பன்னீர் மசாலா  (Read 457 times)

Offline kanmani

Simple... பன்னீர் மசாலா
« on: April 13, 2014, 08:24:24 PM »
தேவையான பொருட்கள்:

பன்னீர் - 600 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது) மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் தக்காளி - 3 (அரைத்தது) சில்லி சாஸ் - 200 மி.லி கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) வெண்ணெய் - 60 கிராம் மிளகு - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே வாணலியில் மீண்டும் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கி, மல்லி தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, வேண்டுமானால், சிறிது எண்ணெயும் சேர்த்து கிளறி விட வேண்டும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் சில்லி சாஸ் ஊற்றி, கலவையை கொதிக்க விட வேண்டும். கலவையானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் வெண்ணெய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, வெண்ணெயை உருக வைக்க வேண்டும்.

வெண்ணெயானது உருகியதும், அதில் பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், காரமான பன்னீர் மசாலா ரெடி!!!