தேவையான பொருட்கள்:
தயிர் - 1 கப் சர்க்கரை - 3 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் - 2 துளிகள் ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை குங்குமப்பூ - சிறிது ஃப்ரஷ் க்ரீம் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1/2 கப் ஐஸ் கட்டிகள் - 3-4
செய்முறை:
முதலில் தயிரை நன்கு அடித்து, அதனை நெட்டட் துணியில் ஊற்றி வடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் மற்றும் ரோஸ் வாட்டர் ஊற்றி கலந்து, அத்துடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்து, அதனை மண்ணால் செய்யப்பட்ட டம்ளரில் ஊற்றி, அதன் மேல் ஏலக்காய் பொடி, பாதாம் மற்றும் குங்குமப்பூ சேர்த்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் பருகினால் மட்கா லஸ்ஸி ரெடி!!!