Author Topic: ஸ்பெஷல் புளியோதரை  (Read 402 times)

Offline kanmani

ஸ்பெஷல் புளியோதரை
« on: April 12, 2014, 06:55:18 PM »
என்னென்ன தேவை?

பொன்னி பச்சரிசி - 250 கிராம், புளி - ஆரஞ்சு பழ அளவு, உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டேபிள்  ஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 12, பெருங்காயத் தூள் - தேவைக்கேற்ப, வெந்தயம் - 1 டீஸ்பூன், கடுகு - சிறிது,  மஞ்சள் தூள் - சிறிது,  கறிவேப்பிலை - சிறிது, வேர்க்கடலை - அரை கப், வெல்லம் - கோலி அளவு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் (கொடுக்கப்பட்டுள்ள அளவில் எல்லாம் பாதிப் பாதி)  வறுத்து, கரகரப்பாகப் பொடித்துத் தனியே வைக்கவும். வேறொரு கடாயில் புளியைக் கரைத்துக் கொதிக்க விடவும். அதில் மஞ்சள் தூள், உப்பு, வெ ல்லம் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி இறக்கி வைக்கவும். அரிசியை உதிராக வடித்து, 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, ஆற விடவும். மறுபடி ஒரு  கடாயில் எண்ணெய் விட்டு, மீதமுள்ள கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலையை வறுத்து, சாதத் தில் கொட்டி, தேவையான அளவு புளிக்கரைசல் விட்டு, பொடித்து வைத்துள்ளதில் 2 டீஸ்பூன் தூவி, கிளறி, அரை மணி நேரம் கழித்துப் பரிமாறவும்.