Author Topic: ஆப்பிள் கப்ஸ்  (Read 422 times)

Offline kanmani

ஆப்பிள் கப்ஸ்
« on: April 12, 2014, 06:52:53 PM »
என்னென்ன தேவை?

மீடியம் ஆப்பிள் - 2, பூரணம் - பொடித்த டேட்ஸ், கிஸ்மிஸ், பட்டை தூள் ஒரு சிட்டிகை, சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி, அக்ரூட், பாதாம்  எல்லாம் சேர்த்து - லு கப், ஸ்கூப் செய்த ஆப்பிள் மற்றும் மாதுளை முத்துக்கள் சிறிது, பொடியாக நறுக்கிய அன்னாசி பழம் - சிறிது எலுமிச்சை  சாறு - 1 டீஸ்பூன், ஒரு சிட்டிகை உப்பு. சாட் மசாலா சிறிது. முளைக்கட்டிய பயிர். இது 2 ஆப்பிளுக்கு உள்ள பில்லிங்.

எப்படிச் செய்வது? 

மீடியம் புளிப்பும், இனிப்பும் உள்ள ஆப்பிளை காம்புடன் பாதியாக வேட்டி ஒரு சிறு குண்டு கரண்டியால் ஸ்கூப்  செய்து ஆப்பிள் மத்தியில் உள்ள  சதைப் பற்றை எடுத்து சிறிது உப்பு, எலுமிச்சை சாறு தடவி வைத்து (ஆப்பிள் கறுக்காமல் இருக்க) மற்றும் பில்லிங்கில் கொடுத்துள்ள பூரணத்தை  யாவும் கலந்து ஆப்பிள் பழத்தின் மத்தியில் வைத்து நிரப்பி, அதன்மேல் சாட் மசாலா தூவி அலங்கரித்து கொலுவிற்க்கு வரும் குழந்தைகளுக்கு  கொடுக்கலாம். புதுமாதிரியான நவராத்திரி பிரசாதம்!