Author Topic: வெள்ளை சிரோட்டி  (Read 425 times)

Offline kanmani

வெள்ளை சிரோட்டி
« on: April 12, 2014, 06:50:24 PM »
என்னென்ன தேவை?

மைதா -1/2 கப், ரவை(சிரோடி ரவை) - 1/2 கப், உப்பு - ஒரு சிட்டிகை, குழைப்பதற்கு - நெய் 2 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு -2 டேபிள் ஸ்பூன், பொரிப்பதற்கு - எண்ணெய். பாகு செய்ய- 1 கப் சர்க்கரை, தூவுவதற்கு - கருப்பு எள் - சிறிது.

எப்படிச் செய்வது?

சர்க்கரையில் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, ஒரு கம்பிப் பாகு காய்ச்சவும். மேல்மாவிற்கு கொடுத்ததை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1/2 மணி நேரம் வைக்கவும். பின் 4-5 ரொட்டியாக தேய்த்து ஒவ்வொரு ரொட்டிக்கு மத்தியில் குழைத்ததைப் பூசவும். இப்படி எல்லா ரொட்டியிலும் பூசி ஒன்றன்மேல் ஒன்றாக எல்லாவற்றையும் பாய் போல் அடுக்கி, உருட்டிக் கொண்டு 5 துண்டுகள் போட்டு மறுபடி இதை பூரியாக தேய்க்கவும். இது சுருள் சுருளாக இருக்கும். எண்ணெயை காய வைத்து இரண்டு இரண்டாக பொரித்து எடுத்து, சர்க்கரைப் பாகில் முக்கி எடுத்து எள் தூவி ஆறியதும் பரிமாறவும்.