என்னென்ன தேவை?
முந்திரி பருப்பு - 200 கிராம், இனிப்பு இல்லாத கோவா - 50 கிராம், சர்க்கரை - 3/4 கப், ரோஸ் எசென்ஸ் - சிறிதளவு, பாதாம் - 8 (மெலிதாக நீள வாக்கில் வெட்டியது), வெள்ளி காகிதம் (பெரிய கடைகளில் கிடைக்கும்) - சிறிது.
எப்படிச் செய்வது?
முந்திரி பருப்பை ஊறவைத்து 15 நிமிடங்கள் கழித்து, மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் கெட்டி பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாய் அகன்ற கடாயில் சர்க்கரையுடன், 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, அரைத்த முந்திரி விழுதை சேர்க்கவும். இத்துடன் கோவாவை துருவிச் சேர்த்து கைவிடாமல் கிளறவும். அது சுருண்டு வரும்போது இறக்கி எசென்சை சேர்த்து இறக்கி, கை சூடுபதம் இருக்கும்போதே நெல்லிக்காய் அள வுக்கு உருட்ட வேண்டும். இது நன்றாக ஆறியதும் சில்வர் காகிதத்தை எடுத்து உருண்டையை அதன் மேல் வைத்து உருட்டினால் எல்லாப் பக்கமும் காகிதம் ஒட்டிக் கொள்ளும். பின் மேல் பாகத்தில் மாதுளைப்பூ மாதிரி வெட்டி, பாதாம் துருவலை தோலோடு ஸ்டஃப் செய்யவும். இது ஒரு ஸ்பெஷல் மிட்டாய் மாதுளம் பூ கத்திலி.