என்னென்ன தேவை?
வேர்க்கடலை - 1 கப்,
உளுந்து - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 2 முதல் 4,
உப்பு தேவைக்கேற்ப,
புளிப்பில்லா தயிர் 2 கப்,
சாட் மசாலா தேவைக்கு,
அலங்கரிக்க வேர்க்கடலை.
எப்படிச் செய்வது?
உளுந்தை ஊற வைத்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும். இத்துடன் வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக பொடித்து உளுந்துடன் சேர்த்து கலந்து (வடை பதமாக) பின் எண்ணெயில் வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும். ஒரு தட்டில் வடைகளை அடுக்கி, தயிரை நன்கு அடித்து தேவையான உப்பு சேர்த்து அதன்மேல் ஊற்றி, வடைகள் ஊறியதும் பரிமாறும்போது சிறிது வேர்க்கடலை தூவி சாட் மசாலா தூவி பரிமாறவும். இது வித்தியாசமான தயிர் வடை