என்னென்ன தேவை?
வேக வைத்த பாசிப் பருப்பு ஒரு கப்,
தேவையான காய்கள்: பீன்ஸ், அவரை, சேனை, வாழைக்காய், பரங்கிக்காய், புடலை, பூசணிக்காய், முருங்கை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கத்தரிக்காய், கேரட், மொச்சை என்று மொத்தமாக ஒரு பெரிய கிண்ணம் அளவு.
வறுத்து அரைக்க:
தனியா 4 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 6,
தேங்காய் அரை மூடி.
தேவையான அளவு உப்பு,
எண்ணெய்.
தூள்கள்:
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப,
புளி ஒரு நெல்லிக்காய் அளவு,
வெல்லம் ஒரு சிறு துண்டு.
எப்படிச் செய்வது?
எல்லா காய்களையும் சுத்தம் செய்து நறுக்கி உப்பு போட்டு வேகவைத்துக்கொள்ளவும். வறுக்க கொடுத்ததை சிறிது எண் ணெய் விட்டு வறுத்து அரைக்கவும். காய்களுடன் சேர்க்கவும். காய்கள் வெந்ததும். புளி, வெல்லம், பொடிகள், பருப்பு மற்றும் எல் லாவற்றையும் சேர்த்து நன்றாக கொதித்து வந்ததும் இறக்கி, பின் கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொங்கலுடன் பரிமாறவும்.
குறிப்பு: காரம் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். பொங்கலுக்கு ஸ்பெஷல் சைட்-டிஷ் குழம்பு.