Author Topic: கார்ன் ஃப்ளேக்ஸ் மிக்ஸர்  (Read 563 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

கார்ன் ஃப்ளேக்ஸ் - 4 கப்,
வேர்க்கடலை - 1/4 கப்,
முந்திரிப் பருப்பு - 1/4 கப்,
திராட்சை - 1/4 கப்,
கறிவேப்பிலை - சிறிது,
சர்க்கரை (விரும்பினால்) - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள், உப்பு - தேவைக்கேற்ப,
பொரிப்பதற்கு- எண்ணெய்.

எப்படிச் செய்வது? 

கடாயை சூடாக்கி, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும், முதலில் கார்ன் ஃப்ளேக்ஸை கொஞ்ச கொஞ்சமாகப் போட்டு பொரித்தெடுத்துபேப்பர் மேல் வைத்துக் கொள்ளவும். பிறகு, முந்திரி, திராட்சை, கறிவேப்பிலை, வேர்க்கடலை என்று கொஞ்சம் கொஞ்சமாக வறுத்து எண்ணெய் வடிந்ததும் சூடாக இருக்கும் போதே அதன் மேல் உப்பு, மிளகாய் தூள், சர்க்கரை கலந்து ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும்.

இந்த மிக்ஸரை சில நிமிடங்களில் தயாரிக்க முடியும். பரிமாறும்போது தட்டு நிறைந்து இருக்கும்.வெறும் கடாயில் கார்ன்ஃப்ளேக்ஸை வறுத்து உடனே கலந்து பரிமாறவும்