என்னென்ன தேவை?
வறுத்த வேர்க்கடலை - 30 கிராம்,
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்,
புதினா - 12 இலைகள்,
கொத்தமல்லி - சிறிது,
பச்சை மிளகாய் - 1,
மயோனைஸ் - 2 டீஸ்பூன்,
லெட்டூஸ் இலை - சிறிது,
ஸ்லைஸ் செய்த ஆப்பிள் - சிறிது,
உலர்ந்த திராட்சை - சிறிது,
முந்திரி - 5, சீஸ் - சிறிது,
தக்காளி சாஸ் - சிறிது,
பிரெட் ஸ்லைஸ் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
வேர்க்கடலை முதல் பச்சை மிளகாய் வரையிலான பொருட்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும். அத்துடன் மயோனைஸ் சேர்த்துக் கலந்து தனியே வைக்கவும். பிரெட் ஸ்லைஸ் மீது, முதலில் இந்த சாஸை தடவவும். அதன் மேல் லெட்டூஸ் இலை, அடுத்து ஆப்பிள் ஸ்லைஸ், உலர்ந்த திராட்சை, முந்திரி, சீஸ் என வரிசையாக வைத்து, மறுபடி ஒரு ஸ்லைஸ் பிரெட்டினால் மூடவும். முதலில் தயாரித்த சாஸ் உடன், சிறிது தக்காளி சாஸ் கலந்து சைட் டிஷ் ஆகப் பரிமாறவும்