Author Topic: ~ எண்ணெய் வழியும் முகமா? ~  (Read 534 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227456
  • Total likes: 29058
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எண்ணெய் வழியும் முகமா?




சிலருக்கு எண்ணெய் வழியும் முகமாக இருக்கும். அதனால் தங்கள் அழகு பாதிக்கப்படுவதாக நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எண்ணெய் பசையை நீக்க என்ன செய்யலாம் என்ற குறிப்பு இதோ...


* வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர, முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதைத் தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.


* தக்காளிப் பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.


* பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.


* எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை கழுவ சோப்புக்குப் பதில் கடலை மாவு பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாகக் காட்சியளிக்கும்.


* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகத்தில் மோர் தடவி சிறிதுநேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும்.


* வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம்பழச் சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் எண்ணெய் வழிவது குறையும்.


* சோள மாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், முகத்தின் எண்ணெய் பசை நீங்கும்.


* எண்ணெய் பசை சருமத்தினர், வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். அப்போது, அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.


* எலுமிச்சைச் சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சைச் சாறு ஆகியவற்றை சமஅளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாகக் கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிதுநேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.


* பப்பாளிக் கூழ், முல்தானி மட்டி, வேப்பிலைப் பொடி ஆகியவற்றை நன்றாகப் பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.