Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ களைப்பைப் போக்கும் காலை உணவு! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ களைப்பைப் போக்கும் காலை உணவு! ~ (Read 508 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227456
Total likes: 29058
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ களைப்பைப் போக்கும் காலை உணவு! ~
«
on:
April 03, 2014, 01:22:51 PM »
களைப்பைப் போக்கும் காலை உணவு!
களைப்பைப் போக்கும் காலை உணவு!
''காலேஜ் பஸ் வந்திடும். பஸ்ஸை மிஸ் பண்ணிட்டா... அவ்வளவுதான். எனக்கு டிபன் வேண்டாம்... ஆளை விடு!''
''ஒரு மணி நேரமா கண்ணாடி முன்னாடி நிக்கிற.... ஒரு வாய் சாப்பிடாம ஓடறியே...!'
- இப்படி, பிள்ளைக்கும் தாய்க்குமான உரையாடல் ஒவ்வொரு வீட்டிலும் தினமும் ஒலிப்பதைக் கேட்காமல் இருக்க முடியாது.
வேகமாக இயங்கும் அவசர வாழ்க்கையில் மாணவர்கள் முதல், பணிக்குச் செல்பவர்கள் வரை பலரும் காலை உணவைத் தவிர்த்தே வருகின்றனர். காலை உணவைத் தவிர்ப்பதால் வரக்கூடிய பிரச்னைகள் பற்றி திண்டுக்கல்லைச் சேர்ந்த வயிறு மற்றும் இரைப்பை சிறப்பு மருத்துவர் கண்ணனிடம் பேசினோம்.
'வேலைக்குச் செல்பவர்களும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த மாதிரியான தவறைச் செய்கின்றனர்.
காலை உணவை எடுக்காமல் இருக்கும்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் குளுக்கோஸின் அளவும் குறைந்துவிடும். இதனால், சீக்கிரமே களைப்பு ஏற்படும். வேலையில் முழு கவனம் செலுத்த முடியாமல் போகும். சிலருக்கு மயக்கம்கூட வரலாம்.
உணவை செரிக்கக்கூடிய, என்சைம் (நொதி) அளவை பாசல் ஆசிட் அவுட்புட் (BASAL ACID OUTPUT) என்போம். நாம் சாப்பிடுகிற உணவை செரிப்பதற்கு, இந்த 'என்சைம்கள்’ பயன்படுகின்றன. இந்த என்சைம்களின் சுழற்சி, உணவின் சுழற்சியுடன் சேர்ந்தே நடைபெறுகிறது.
இந்த என்சைம்கள் இரவு நேரத்தில் குறைவாகவும், 'பீக் அவர்ஸ்’ என்று சொல்லப்படுகிற காலை 7 மணியில் இருந்து 11 மணி வரை, அதிகமாகவும் சுரக்கின்றன.
காலை உணவை உட்கொள்ளாமல் இருக்கும்போது இந்த நொதிகளின் சுரப்பு அதிகமாகி, வயிற்றின் சுற்றுப்பகுதிகளில் சின்னச் சின்ன காயங்களை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக உணவு உட்கொள்ளாமலேயே இருந்தால் 'அல்சர்’ எனப்படும் வயிற்றுப்புண் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
மேலும், கணைய நீர், பித்த நீர் ஆகியவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், சுரக்கப்பட்ட என்சைம்கள் உடலின் பாகங்களையே அரிக்க ஆரம்பித்துவிடும். இதனால், நம் உள்ளுறுப்புகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, சிலர் காலை உணவைத் தவிர்ப்பார்கள்.
காலையில் சாப்பிடாமல் இருக்கும்போது, மதிய வேளைகளில் அதிகமாக உணவு எடுத்துக்கொள்ள நேரிடும். இதனால், உடல் உறுப்புகளுக்கு பிரச்னை ஏற்படுமே தவிர, உடல் எடை குறைய வாய்ப்பே இல்லை.''
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ களைப்பைப் போக்கும் காலை உணவு! ~