Author Topic: கிறிஸ்துமஸ  (Read 5648 times)

Offline Global Angel

கிறிஸ்துமஸ
« on: November 25, 2011, 05:28:44 AM »
கிறிஸ்துமஸ

நவம்பர் மாதம் வந்துவிட்டாலே கிறிஸ்துமஸை பற்றிய குதுகலம் நிறையத் துவங்கிவிடும், அப்போது மேரிக்கு பதினான்கு வயதிருக்கும் எதையும் உணரத் தெரியாத வயசு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மனதை சந்தோஷப்படுத்துவதில் இருக்கும் அளவிற்கு வீட்டில்அதற்க்கான அடையாளங்கள் நிறைந்திருக்காது, மேரி ஒரு ஏழைப் பெண், ஏழைகளுக்கு ஏது பண்டிகை.

ஏழ்மைநிலையில் வாடிக்கொண்டிருக்கும் இளம் தளிர் அவள், அவளுக்குத் பண்டிகை கொண்டாட்டத்தின் அர்த்தம் என்னவென்பது ஒன்றும் அறிந்திராதவள், பனி கொட்டும் இரவுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதால் நல்ல குளிரில் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து குளித்து புதிய உடை இருப்பவர்கள் உடுத்திக் கொண்டு ஆலயத்திற்கு போவது வழக்கம், மேரியின் கிறிஸ்துமஸ் எப்போதுமே ஒரே மாதிரித்தான் கொண்டாடப்பட்டு வந்துள்ளது, அதிகாலை மூன்றரை மணிக்கு இருட்டில் குடும்பத்தோடு ஆலயத்திற்குச் சென்று அங்கு குழுமியுள்ள கூட்டத்தின் புதிய உடைகளை வெறித்து பார்த்துவிட்டு வீடு திரும்புவது.

மேரியின் வீடு அமைதியின் இருப்பிடம், சிலரது வாழ்க்கையில் குடிகார அப்பாவினால் குடும்பத்தில் அமைதியே இராது, ஆனால் மேரியின் வீடு அமைதியின் மொத்த இருப்பிடம். உடுத்த புதிய உடை இல்லையென்ற குறை கூட பெரிதாக தெரியாமல் போய்விடும். அன்பினால் ஒருவரையொருவர் ஆக்கிரமித்த குடும்பம்.

மேரியின் அம்மா செய்து வைத்திருக்கும் கிறிஸ்துமஸ் பலகாரங்களை அண்டை வீடுகளில் உள்ளவர்களுக்கு கொடுக்கச் சொல்லி அனுப்பி வைப்பாள், அப்படி அனுப்பும் வீடுகளில் அவளது சொந்தக்காரர்களின் வீடுகளுக்கும் செல்வதுண்டு, மேரியின் அப்பாவின் இரு சகோதரர்களின் வீடுகளுக்கு பலகாரம் கொண்டு சென்று அவர்களது வீட்டின் வாசலை நெருங்கும் போதே வீட்டினுள் நடக்கும் சண்டையின் சப்தம் வீதியில் தெளிவாக கேட்கும், மேரிக்கு அந்த வீட்டிற்குள் போகலாமா வேண்டாமா, பலகாரத்தை திரும்பி எடுத்துக் கொண்டு போனால் அம்மா திட்டுவார்களே என்று எண்ணிக்கொண்டிருக்கும் போது சண்டை போட்டுக் கொள்பவரில் வீட்டை விட்டு வெளியேறுபவர் எப்போதுமே மேரியின் பெரியப்பாவும் சித்தப்பாவுமாகத்தான் இருக்கும், சில சமயங்களில் பெரியம்மா பெட்டியுடன் கிளம்பி கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறுவதும் பார்க்க முடியும்.

மேரிக்கு இவற்றின் அர்த்தம் புரிந்துகொள்ள இயலாத வயசு, சண்டை நடக்கும் இரண்டு வீடுகளிலும் புதிய ஆடைகள், வீட்டு அலங்காரம், சமையல்காரனை வைத்து பலகாரம் தயாரித்தல் என்று கிறிஸ்துமஸ் களை கட்டி இருந்தாலும் இவர்கள் ஏன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது கேள்வி குறியாகவே இருப்பதுண்டு.

அப்போது மேரிக்கு இருபத்து இரண்டு வயதிருக்கும் கிறிஸ்துமஸ் நெருங்கி கொண்டிருந்த சமயம், என்னுடன் பேசிக்கொண்டிருந்த மேரி இந்த கேள்வியை என்னிடம் கேட்டாள், எல்லாமிருந்தும் இவர்கள் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டு சந்தோஷமில்லாமல் இருக்க காரணம் என்னவாக இருக்க முடியும் என்பது எனக்கு இன்றுவரையில் விளங்காத கேள்வியாகவே இருந்து வந்துள்ளது, என் அப்பாவைப் போலவே என் சித்தப்பாவும் பெரியப்பாவும் குடிகாரர்களோ சூதாட்டக்காரர்களோ கிடையாது, மனைவியை அதிகம் நேசிப்பவர்கள் அப்படி இருந்ததும் ஏன் இந்த ஓயாத சண்டை என்றாள்.

கிறிஸ்துமஸ் என்பதன் பொருள் என்னவென்று தெரிந்து கொள்வதை விட கிறிஸ்து என்கிற கடவுள் மனிதனாக பிறந்ததின் காரணத்தை இவர்கள் அறிந்தும் அதை பூரணமாய் தங்கள் மனதினுள்ளும் தன் வாழ்க்கையிலும் ஏற்றுக்கொள்ளாமல் இந்த உலகத்திற்குரிய பலவித ஆசைகளால் இழுப்புண்டு சண்டை சச்சரவுகளை உண்டாக்கும் காரியாங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி ஒருவரையொருவர் காயப்படுத்தி கொண்டு அறியாமையிலேயே வாழ்ந்துவருகிறார்கள், எல்லாம் இருந்ததும் சமாதானம் சந்தோசம் போன்றவற்றை இழந்து தங்களை வருத்திக் கொள்ளுகிறார்கள்.

எப்படி என்றால் கிறிஸ்துவின் பிறப்பு என்பது உலகத்தில் வாழும் மனிதர்கள் ஒருவரையொருவர் சுத்த மனதோடு நேசிக்க வேண்டும் என்கிற அடிப்படையான கட்டளையை மறந்து தினம் தினம் ஒன்றுமில்லாத உலகப் பொருளுக்காக ஒருவரையொருவர் காயப்படுத்தி கொள்கிறார்கள் என்றேன் நான்.

மேரிக்கு நான் சொன்னது முழுவதுமாக புரிந்து கொள்ள முடிந்ததா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள அவளுக்குத் திருமணமாகி குடும்ப வாழ்க்கையினுள் காலடி எடுத்து வைத்த பின்னர் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் காத்திருக்கிறேன். இயேசு கிறிஸ்த்துவே நமக்கு கிடைத்த மிகப்பெரிய விலைமதிப்பற்ற விருது. விலை மதிப்பற்ற வைரமும் ஆடை அணிகலன்களும் அதற்க்கு நிகர் இல்லை என்பதே கிறிஸ்துமஸ்
                    

Offline RemO

Re: கிறிஸ்துமஸ
« Reply #1 on: November 27, 2011, 03:48:35 PM »
// கிறிஸ்துவின் பிறப்பு என்பது உலகத்தில் வாழும் மனிதர்கள் ஒருவரையொருவர் சுத்த மனதோடு நேசிக்க வேண்டும்//

நல்ல கருத்து