Author Topic: ~ வேர்க்கடலை அரைச்சு விட்ட கத்திரிக்காய் காரக்குழம்பு! ~  (Read 465 times)

Offline MysteRy

வேர்க்கடலை அரைச்சு விட்ட கத்திரிக்காய் காரக்குழம்பு!

தேவையானப் பொருட்கள்:

சின்ன சின்னதான பிஞ்சுக் கத்திரிக்காய்- 4
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
சீரகம் - சிறிது
கடுகு - சிறிது
எண்ணெய் - 2  டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
வெங்காயம், தக்காளியை கழுவி பொடியா வெட்டிக்கோங்க, புளியை ஊற வைங்க. கத்திரிக்காயை முழுசா இருக்குமாறு நீள வாக்குல வெட்டி தண்ணில போட்டுக்கோங்க. இல்லாட்டி கத்திரிக்காய் கறுத்துடும். வேர்க்கடலையை அப்படியே மிக்சில போட்டு தண்ணி விட்டு கொஞ்சம் கரகரப்பா அரைச்சுக்கோங்க.
வாணலில ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி கத்திரிக்காய்களை வதக்கி எடுத்து வச்சுக்கோங்க.
மீண்டும் வாணலில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், கடுகு, சீரகம் போட்டு பொரிய விடுங்க.
வெட்டி வச்சிருக்கும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமா வதக்குங்க.
தக்காளி சேர்த்து வதக்குங்க. தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்குங்க.
அரைச்சு வச்சிருக்கும் வேர்க்கடலை விழுதை சேர்த்து லேசா வதக்குங்க.
மிளகாய்தூள் சேர்த்து லேசா வதக்குங்க.
மிளகாய்தூள் வதக்கித் தேவையான அளவு தண்ணி, கத்திரிக்காய் சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க.
 
மிளகாய் தூள் வாசனை போனதும் புளிக்கரைசலை ஊத்தி, கறிவேப்பிலை சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க.

கத்திரிக்காய் காரக்குழம்பு ரெடி. இது கொஞ்சம் திக்கா இருந்தாதான் நல்லா இருக்கும். தேவைப்பட்டா பூண்டு சேர்த்துக்கலாம்.