கோழிக்கறி சூப்
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 1 கப்
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு, மிளகுத் தூள் - தேவையான அளவு
புதினா இலை - சிறிது
செய்முறை:
கோழிக்கறியை சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்ததும் தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
இந்த நீரில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துக் கொதிக்க வைத்து, கொதித்ததும் அஜினோமோட்டோ சேர்த்து இறக்கவும்.
சிறிதளவு வேக வைத்த சிக்கனை துண்டுகளாக்கி சூப்புடன் சேர்க்கவும்.
உப்பு, மிளகுத்தூள், புதினா அல்லது கொத்துமல்லி தழையை தேவையான அளவு சேர்த்து பருகவும்.