Author Topic: எனக்கு உண்மை பேச ஆசை  (Read 1044 times)

Offline Global Angel

எனக்கு உண்மை பேச ஆசை
« on: November 28, 2011, 05:21:30 AM »
எனக்கு உண்மை பேச ஆசை

என் தாயின்
கருவறை இருட்டில் நான்
கிடந்த போது
கண்ணும் காதும் மூக்கும்
சுவையறிய நாக்கும்
சில உணர்வறிய
மூளையும் உருவான போது
யாருடனோ எதற்கோ
என் தாய்
பொய் சொன்னாள்

என் தாயின்
அரவணைப்பில் நான்
கிடந்த போது
என்னைச்சுற்றி பலர்
எதற்கோ பல
பொய் சொன்னார்

என்னை உறங்க
வைக்கும்
தாலாட்டில் கூட
மிகைபடுத்தி
பொய் சொன்னாள்
அவள் இனிய குரலின்
நாதம் என்னை 'மெய்'
மறந்து உறங்கச் செய்யும்

நான் அழுது
அடம் பிடிக்கும்போதும் கூட
பொம்மை இனிப்பு
எல்லாம் வாங்கித்
தருவேன் என்று
நித்தம் ஒரு
பொய் சொன்னாள்
ஊட்டிய சோற்றில் கூட
நிலவை காட்டி
பொய் கலந்தாள்

நிலவு ஓடி வருமோவென்று
யோசிக்க வைத்து என்
வாயில் சோறு திணிப்பாள்
அடுக்கடுக்காய் பொய் சொல்லி
என் 'மெய்' வளர்த்தாள் ஆனால்

எனக்கு உண்மை பேச ஆசை

பருவப் பெண்ணாய்
பள்ளிக்கு படிக்கச்
செல்லும் போது
காதலென்று யாரோ ஒருவன்
பொய் சொல்லிப் போனான்
கல்லூரிக்குச் சென்ற போது
காதல் கவிதையொன்றில்
எண்ண வொண்ணா பொய்கள்
சொன்னான்

பால்காரன் கடைக்காரன்
பூக்காரி வேலைக்காரி
சினிமாக்காரன் அரசியல்வாதி
மருத்துவர் சிகையலங்காரி
இன்னும் எத்தனையோபேர்
பொய்யே சொன்னார்

பெண்ணின் கழுத்தில்
தாலி கட்டுமுன்னும்
பின்னும் தன்னை
ராமன் என்று பலர்
பொய் சொன்னார்

தொட்டில் தொடங்கி
கட்டில் வரை
பொய்யே சொன்னார் ஆனால்
எனக்கு உண்மை பேச ஆசை

நான் சொல்லுவதெல்லாம்
உண்மையென்றேன்
யாரும் நம்புவதில்லை
உண்மையொன்று
சொன்னால் போதும்
பயித்தியம் என்று பலர்
என்னை பார்த்து
நகைத்துவிட்டு
ஒதுங்கிச்சென்றார் ஆனால்

எனக்கு உண்மை பேச ஆசை



padithathil pidithathu  ;)
                    

Offline RemO

Re: எனக்கு உண்மை பேச ஆசை
« Reply #1 on: November 28, 2011, 09:06:15 AM »
//நான் சொல்லுவதெல்லாம்
உண்மையென்றேன்
யாரும் நம்புவதில்லை
உண்மையொன்று
சொன்னால் போதும்
பயித்தியம் என்று பலர்
என்னை பார்த்து
நகைத்துவிட்டு
ஒதுங்கிச்சென்றார் ஆனால்//


இது உண்மை தான்
பயமில்லாமல் பொய் சொல்லும் உலகம்
உண்மையை சொல்ல மட்டும் பயபடுவது ஏன்?

Offline Global Angel

Re: எனக்கு உண்மை பேச ஆசை
« Reply #2 on: November 28, 2011, 01:24:47 PM »

உண்மைக்கு எங்கயும் மரியாதை இல்லை போல
                    

Offline RemO

Re: எனக்கு உண்மை பேச ஆசை
« Reply #3 on: November 28, 2011, 03:56:53 PM »
ஆமாம் ஏஞ்செல்