தாயும் சேயும்
அழகிய செந்நிற மேனி
கருத்து விரிந்த கண்கள்
அன்ன நடை
பின்னழகை கூட்டும்
நீண்ட முடி
என் இரு கைகளிலும்
முகத்தை அள்ளி என்
முகத்தருகே வைத்து
முகர்ந்தேன்
பாலின் மணம்
வாய் திறந்து
அம்மாவென்று
அழைத்த உடன்
என்னைத்தான்
அழைத்தாயோ என
கண் விழித்தேன்
சற்றே தொலைவில்
தாயை கண்டு
துள்ளி குதித்து
ஓடிச்சென்று
மடி முட்டி
பால் குடித்தாய்
உன்னை கண்ட
பூரிப்பில் உன்
அம்மா தன்
நாவால் நக்கி
தன்னருகே உன்னை
அணைத்துக்கொண்டது