என் வீட்டுக்குள்
கேட்காமல் வந்த தென்றலைப் போல
என் மனதுக்குள்
கேட்காமலே வந்தது உன் காதல்
வந்த தென்றல்
என் சுவாசக்காற்றாய் மாறியது போல
என் மனதுக்குள்
வந்த உன் காதல்
என் உயிர்மூச்சாய் மாறியதே
சுவாசக்காற்று நம்முள் வரும்
வந்து மறுபடி வெளியேறும்
உயிர் மூச்சி உள்ளே வரும்
வெளியில் போனால்
மனிதனுக்கு பெயர் பிணம்
உன் காதலும் அப்படி தான்
என்னை விட்டு அது ஓரடி நகர்ந்தாலும்
என் உடல் பிணம் தான்
ஒன்றும் தேவையில்லை எனக்கு
உன்னை காதலிக்கிறேன் என்ற
ஒரு வார்த்தை போதும்
நான் உயிர்வாழ