எளிய இயற்கை மருத்துவக் குறிப்புகள்:-

குப்பைமேனிஇலை:
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து நன்கு அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்து வர அவை குணமாகும்.
வயிற்றுவலி போக்கும் நறுவலிப்பட்டை:
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, அதை தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி படிபடியாக குறையும்.
கரிப்பான் இலை:
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை பிரச்சனை நீங்கும்.
கடலை இலை:
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் வலி முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் குணமாகும்..
மலச்சிக்கல்:
பிஞ்சு கடுக்காய்,சுக்கு சம அளவு எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு நன்கு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். இவ்வாறு செய்தல் நன்றாக மலம் இளகும்.
மூலம் அகல:
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் படிபடியாக மறைந்து விடும்.