Author Topic: வாழ்வின் பயணம்  (Read 375 times)

Offline தமிழன்

வாழ்வின் பயணம்
« on: February 18, 2014, 08:09:57 PM »
இறந்தகாலச் சேற்றில் விழுந்து
எழ  முடியாமல்
இறப்பே நிகழ்வாய்
எதிர்க்கரை கண்டு
ஏங்கித் புலம்புதல் விடு

இறப்பை உதறு
நிகழ்வில் இறங்கி
காலடி பதித்து நட

ஒவ்வொரு கனத்தையும்
எதிர்வரும் எதையும்
எதிர்கொள் எதிர்த்து மோதிடு

எதையும் நிகழ்வாய்
மாற்றிட மாற்றிட
வாழ்க்கை உன் வசப்படும்

வாழ்க்கைப் பயணத்துக்கு
செல்லும் திசையுண்டு
சேரும் இடம் இல்லை

பயணமே அனுபவம்
அனுபவமே ஆனந்தம்
ஆனந்தமே வாழ்க்கை

சென்று சேர்ந்துவிடுவது மரணம்
சேராமல் நில்லாமல் செல்
சென்று கொண்டேயிரு