Author Topic: ~ சிறுநீர் கழிக்கும் பொது ஏற்படும் பிரச்னை நீங்க பாட்டி வைத்தியம்:-:- ~  (Read 462 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சிறுநீர் கழிக்கும் பொது ஏற்படும் பிரச்னை நீங்க பாட்டி வைத்தியம்:-:-




சிறுநீர் சொட்டு சொட்டாக வருதல் (சிறுநீர் ஒழுக்கு)

பாலக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால், சொட்டுச் சொட்டாக சிறுநீர் வெளியேறும் பிரச்னை தீரும். சிறுநீர்ப்பையும் வலுப்படும்.

பண்ணைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், சொட்டுச் சொட்டாக சிறுநீர் வெளியாவது (சிறுநீர் ஒழுக்கு) நிற்கும்.

சிறுநீர் கடுப்பு

சுக்குக் கீரையுடன் சோம்பு, சீரகம், மஞ்சள், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர்க்கடுப்பு சரியாகும்.

சிறுநீர் எரிச்சல்

கானாம்வாழைக் கீரையை அரைத்துச் சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் தீரும்.

பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், பார்லி சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல் நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.