Author Topic: உளுந்து அடை  (Read 575 times)

Offline kanmani

உளுந்து அடை
« on: January 22, 2014, 11:39:32 PM »


 

    புழுங்கல் அரிசி - ஒரு கப்
    கருப்பு உளுந்து - அரை கப்
    சின்ன வெங்காயம் - 30
    பச்சை மிளகாய் - 4
    தேங்காய் துருவல் - 1 1/4 கப்
    சோம்பு - ஒரு தேக்கரண்டி
    உப்பு - அரை மேசைக்கரண்டி
    முட்டை - ஒன்று

 

தனித்தனி பாத்திரத்தில் உளுந்து மற்றும் அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஊறியதும் உளுந்தை கழுவி தோல் நீக்கி கிரைண்டரில் போட்டு நன்கு அரைக்கவும். நன்கு அரைப்பட்டவுடன் வழித்து எடுத்து விட்டு அரிசியை கழுவி போட்டு அரைக்கவும். அரிசி போட்டவுடன் சோம்பு, வெங்காயம், தேங்காய் துருவல், பச்சை மிளகாய் போட்டு அரைக்கவும்.

ரவை பதம் வந்ததும் வழித்து எடுத்து விடவும். அந்த மாவுடன் முட்டை உடைத்து ஊற்றி உப்பு போட்டு கையால் அல்லது கரண்டியால் கலக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு முழுக்கரண்டி மாவை எடுத்து ஊற்றி மூடி வைக்கவும்.

தேய்க்க வேண்டாம். 4 நிமிடம் கழித்து மொறுமொறுவென்று ஆனதும் திருப்பி போட்டு 3 நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து விடவும்.

மொறுமொறு உளுந்து அடை தயார்