மருந்தாகப் பயன்படும் உணவுப் பொருட்கள்:-

அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருக்கின்றது.
தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும்.
கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும்.
சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும்.
புதினா சாப்பிட்டால் பசியைத் தூண்டும்.
கீழாநெல்லியை சாப்பிட்டால் மஞ்சள்காமாலை நோய் மறையும். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.
இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன.
பசும்பால் தாதுக்கள் ஆண்மையை அதிகரிக்கும்.
எருமைப் பால் புத்தியை மந்தம் அடையச் செய்யும்.
ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும்.
மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்.
வெண்ணை ஆண்மையை பெருக்கும்.
நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும்.
கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும்.
தேன் கண்களுக்கு நல்லது.
நல்லெண்ணை குளிர்த்தன்மை உடையது.