Author Topic: போகா - பழ லட்டு  (Read 470 times)

Offline kanmani

போகா - பழ லட்டு
« on: January 21, 2014, 11:24:03 PM »
என்னென்ன தேவை?

அவல் - 1/4 கப்,
பேரீச்சம்பழம் - 5,
வெல்லம் - 1/4 கப்,
ஏலக்காய்த் தூள் - 1/4 டீஸ்பூன்,
பொடித்த பாதாம் - 6,
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது? 

அவலை தண்ணீரில் அலசிக் கழுவவும். அத்துடன் நறுக்கிய பேரீச்சம்பழம், பொடித்த பாதாம் பருப்பு, வெல்லம், ஏலக்காய்த் தூள், துருவிய தேங்காய்  சேர்த்து உருண்டையாகப் பிடிக்கவும்.

ரத்த உற்பத்தியை மேம்படுத்தும். ரத்த சோகையில் இருந்து விடுவிக்கும். எளிதில் ஜீரணமாகும் உணவு.