Author Topic: ~ கிச்சன் டிப்ஸ்! ~  (Read 604 times)

Offline MysteRy

~ கிச்சன் டிப்ஸ்! ~
« on: January 16, 2014, 04:39:20 PM »
கிச்சன் டிப்ஸ்!


.சோமாஸ், சுருள்போளி, செய்ய மாவு பிசையும்போது டால்டா, சோடாஉப்பு கலந்து 5 மணி நேரம் ஊறிய பின் செய்தால், மிருதுவாக இருக்கும். இடிக்க வேண்டியதே இல்லை.

.அதிரசம் செய்யும்போது பொசுபொசுவென இருக்க, பாகு செய்யும்போது பாகை, தண்ணீரில் சில சொட்டுக்கள் விட்டால், உருட்டுவதற்கு ஏற்ற பக்குவத்தில் மாவைக் கலந்து செய்யலாம். இதோடு எள்ளை வறுத்துக் கலந்து பிசைந்து அதிரசம் செய்தால் நல்ல மணமாக இருக்கும்.

.முறுக்கு மிருதுவாக இருக்க வேண்டுமானால், அதற்கு சரியான அளவில் பொருள்களைகச் சேர்க்க வேண்டும். உதாரணமாக 4 படி அரிசியோடு, அரை படி வெள்ளை உளுந்து, கால் படி பாசிப் பயறும் வறுத்துப்போட்டு முறுக்கு செய்யும்போது பால், டால்டா கலந்து செய்தால், அதன் சுவையே தனிதான்.

.நெய் சேர்த்து ரவா லாடு செய்தபின், நல்ல வெள்ளை நிறமாக இருக்க, சர்க்கரையை நைசாக அரைத்து வைத்துக்கொண்டு அதில் புரட்டி வைக்கலாம்.

.சுழியன் செய்யும்போது கடலைப் பருப்பை வேக வைத்து பின் அரைத்து, இதனை நன்றாக வதக்கிவிட்டு, அதேபோல் தேங்காயையும் வதக்கி பின் செய்தால், 4 நாட்கள்கூட கெடாமல் இருக்கும்.